உயிர்க்கொல்லி புபோனிக் ப்ளேக்: 15 வயது சிறுவன் பரிதாப மரணம்!!

587

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் எங்கும் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் புதிதாக புபோனிக் பிளேக் எனும் நோய் பரவுவது கண்டறியப்பட்டது. இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களிலிருந்து பரவும் நோயாகும்.

இந்த நோயை கண்டறிந்தவுடன் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் 24 மணிநேரத்தில் உயிரிழக்ககூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மங்கோலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டான்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மர்மோட் இறைச்சியை சாப்பிட வேண்டாம் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here