ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் கொலை… குற்றவாளிகளை பார்த்து ஷாக்கான போலீசார்!!

58

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.

மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை ஜெக் அவுட் செய்யாமல் இருந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைத் தொடர்பு கொண்டுபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ஜரீனாவின் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் ஜரீனாவை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஜரீனா தங்கியிருந்த ஹோட்டலின் தூய்மை பணியாளர்களான ராபர்ட், அம்ரித் சோனு ஆகிய இருவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் சம்பவத்தன்று, ஜரீனாவின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், ஜரீனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்களில் ஒருவரை ஜரீனா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹோட்டல் பணியாளர்கள் ஜரீனா கொலை செய்துள்ளனர்.


பின்னர் அவர் வைத்திருந்த வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் மொபைல் போனை கொள்ளையடித்துக் கொண்டு இருவரும் கேரளாவுக்கு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டின் 2 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மதிப்புடைய பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கொலை வழக்கில் பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.