கால்பந்தாட்ட வீரரை அசுர வேகத்தில் வந்து தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி!!

932

ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் இருக்கும் Orekhovo-Zuevo நகரில் FC Znamya Truda கிளப் அணி வீரர்கள் வார இறுதிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோல் கீப்பர் என்றழைக்கப்படும் Ivan Zaborsky வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று மின்னல் அவரை தாக்கியது.

இதனால் அவர் அந்த இடத்திலே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்ட பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பின் உடனடியாக பயிற்சியாளர் Ivan Zaborsky வாயுடன் வாய் வைத்து காற்றை செலுத்தி முதலுதவி கொடுத்தார்.

அதன் பின் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பாட்டார்.


அன்றைய தினம் பயிற்சிக்கு முன்னும், பின்னும் வானம் தெளிவாகவே இருந்த போதும், மின்னல் எப்படி அவரை தாக்கியது என்று தெரியவில்லை, அதே சமயம் அவர் கழுத்தில் அணிந்திருந்த உலோக சங்கிலியால், அவரை மின்னல் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போது Ivan Zaborsky கோமா நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் அவரின் காதலி, Yelena, அவர் நிலையாகவே இருக்கிறார். சுயநினைவை பெற்றாலும், அந்த அதிர்ச்சி காரணம் அவர் மீண்டும் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.