சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா? மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

1129

சர்க்கரை நோயாளிகளுக்கு இதே போன்ற எண்ணற்ற கேள்விகள் அவர்கள் மனதுக்குள் இருக்கத்தான் செய்யும்.

அதிலும் அவர்கள் முட்டையை சாப்பிடலாமா வேண்டுமா..? போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே.

இந்த பதிவில் இவற்றை போன்ற கேள்விகளுக்கான விடையை அறிவோம்.

உணவே மருந்து
நாம் சாப்பிடும் பல உணவுகளில் சரியான தேர்வு இல்லாமலே உட்கொள்கின்றோம். இதன் விளைவுதான் சர்க்கரையின் அளவு கூடுதல். சில முக்கிய உணவுகள் சர்க்கரையின் அளவை கூட்டாமல் சீரான ஆரோக்கியத்தை தரும். அவற்றில் ஒன்றுதான் முட்டையும்.

சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா என்பது சரியான கேள்வியே. ஏனெனில் முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சாப்பிடும் உணவு நிச்சயம் மருந்தாக நம் உடலுக்கு அமைய வேண்டும்.


முட்டை சாப்பிடலாமா..? கூடாதா..?
சர்க்கரை நோயாளிகள் முட்டையை அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் அவற்றின் அளவு மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை காட்டிலும் வெள்ளை கருவை சாப்பிடுவதே உகந்தது.

வேண்டுமென்றால் மருத்துவரை ஆலோசித்து விட்டு இந்த இரண்டையும் சாப்பிடலாம். ஏனெனில் இவை இரண்டிலும் முக்கிய சத்துக்கள் உள்ளது.

முட்டையானது பல்வேறு உடல் சார்ந்த நன்மைகளை தர கூடியது. இதில் பொட்டாசியம் உள்ளதால், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்களையும் வராமல் காக்கும். இதிலுள்ள லுடீன் (lutein) என்ற மூல பொருள் நோய்கள் உடலில் ஏற்படுவதை தடுக்கும். அத்துடன் சொலின் (choline) மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவும்.

நீரிழுவும் கொலெஸ்ட்ரோலும்..!
சர்க்கரை நோயாளிகளுக்கென்று ஒரு மிக பெரிய வரையறைகளை வைத்து கொள்வார்கள். அதில் முக்கிய ஒன்று இதை சாப்பிட்டால் சர்க்கரை கூடும், அதை சாப்பிட்டால் கொலெஸ்ட்ரோல் கூடும் என்பதே.

உணவில் ஜாக்கிரதை முக்கியம்தான். ஆனால் அதற்காக பயம் கொள்ள தேவை இல்லை. முட்டையில் 186 mg கொலெஸ்ட்ரோல் உள்ளது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு தினமும் 200 mg இது இருக்க வேண்டும். எனினும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால் எந்தவித கொலெஸ்ட்ரோல் பிரச்சினையும் ஏற்படாது.