தந்தையுடன் சென்ற இரு பிள்ளைகள்: சுவிஸ் தாயாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்!!

804

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் தந்தையும் இரு பிஞ்சு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துர்காவ் மண்டலத்தில் ஞாயிறன்று மதியம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் சடலங்களை மீட்டுள்ளனர்.

மரணமடைந்த நபருக்கு 38 வயது எனவும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் 7 மற்றும் 4 வயது என தெரியவந்துள்ளது.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பிரிந்து வாழும் தந்தையுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது வழக்கம் என கூறும் 36 வயதான அந்த தாயார்,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

பொதுவாக 5 மணிக்கு பிள்ளைகளை அவர் தம்மிடம் கொண்டுவந்து ஒப்படைப்பதாகவும்,

ஆனால் சம்பவத்தன்று 5 மணி தாண்டியும் அவர்கள் திரும்பாத நிலையில் பொலிசாரே நடந்த சம்பவத்தை அந்த தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இது கொலை மற்றும் தற்கொலை என்றே பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் உடற் கூராய்வுக்கு பின்னரே உறுதியான தகவல் வெளிவரும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.