‘நாங்க இருக்கோம்’ : ஐபிஎல்லை நடத்த ஆயத்தத்துடன் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்..!

1033

கொரோனா வைரஸ் காரணமாக நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடரை வெளிநாட்டில் நடத்தலாமா..? அல்லது ரசிகர்கள் இல்லாமல் சொந்த நாட்டிலேயே நடத்தலாமா..? என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருப்பதாக இலங்கையும், ஐக்கிய அரபு அமீரகமும் முன்வந்தன. ஆனால், ஐபிஎல்லை வெளிநாட்டில் நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும்,

ஒருவேளை வெளிநாட்டில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அது இறுதிகட்ட முயற்சியாகத்தான் இருக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், ஒருவேளை இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, இறுதி நேரத்தில் வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டால், பிசிசிஐயின் அழைப்பை ஏற்று தொடரை நடத்த தயாராக இருப்பதாக துபாய் விளையாட்டு சிட்டியின் கிரிக்கெட் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சல்மான் ஹனிஃப் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது குறிப்பிடத்தக்கது.