பந்தில் எச்சில் தடவினால் இதான் தண்டனை. ஐ.சி.சி போட்ட புது ரூல்ஸ்!! அபராதம் என்ன தெரியுமா?

1041

ஐசிசி தற்போது கொரோன வைரஸ் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது என்று தினறிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதிதாக விதிகளை வகுக்க வேண்டும். மறுபக்கம் வீரர்களுக்கு தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது. இதன் காரணமாக பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி.

14 நாட்கள் வீரர்கள் தனிமையில் இருக்க வேண்டும், வீரர்கள் கொண்டாட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ளக்கூடாது என்று பல விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது .இதில் முக்கியமாக பந்தின் மீது உமிழ்நீர் தடவ கூடாது என்ற விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த விதியின் விளக்கத்தையும் ஐசிசி அளித்துள்ளது.

அதாவது வேறு வழியில்லாமல் பழக்க தோஷத்தில் பந்தில் ஒரு முறை உமிழ்நீரை தடவிவிட்டால் அப்படிச் செய்யும் வீரரின் அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும். ஒருவேளை அந்த அணி பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தால் 5 கழிக்கப்படும் அல்லது பந்துவீசி கொண்டிருந்தால் எதிரணிக்கு 5 ரன்கள் உபரியாக கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது ஐசிசி.


இந்த விதி ஜூலை 8ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இதற்கு மாற்றாக சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், பிரட் லி போன்றோர் இரண்டு பந்துகளை ஒரு போட்டிக்கு பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புதிய விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் எதிர்கால கிரிக்கெட் குறித்த நலனுக்காக இதுபோன்ற கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஐ.சி.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.