பயணிகளை கதிகலங்க வைத்த அமெரிக்க போர் விமானம்: நடுவானில் பதற்றம்!!

645

ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்தை அமெரிக்க போர் விமானம் ஒன்று நடுவானில் தாக்க முயற்சித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், துருக்கியின் பெய்ரூட் விமான நிலையத்திற்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த விமானம் பறந்துகொண்டிருந்தது.

அப்போது திடீரென துருக்கி எல்லையில் அமெரிக்க விமானம் ஒன்று பயணிகள் விமானத்தை நோக்கி மிகவும் அருகில் வந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத விமானி நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்டு விமானத்தை உடனடியாக மேலே நோக்கி செலுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் திடீரென செங்குத்தாக விமானம் மேலே உயர்ந்ததால் விமானிகள் ஏராளமானோர் காயம் அடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் அமெரிக்க விமானம் போதுமான இடைவெளி விட்டே பறந்தது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அணு ஆயுத பிரச்சனையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here