பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!

908

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது. இந்தியாவில் 3 லட்சத்தையும் கடந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல, நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானிலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்து, படிப்படியாக பல தளர்வுகளை அறிவித்து வருகிறது.


இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 11ம் தேதி முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இந்த தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை வேண்டும். இன்ஷா அல்லாஹ்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.