பிரசவத்தை நினைத்து அச்சம்! 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி எப்படியிருக்கிறார் தெரியுமா?

830

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமியின் பிரசவம் நெருங்கும் நிலையில் தனக்கு பயமாக உள்ளதாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் Ivan (10), இவனும் Darya (13) என்ற சிறுமியும் காதலித்த நிலையில் Darya கர்ப்பமானதாக தெரிவித்தார்.

Ivan தான் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை என Darya கூறிய நிலையில் உலகம் முழுவதும் இந்த ஜோடி பெரும் வைரலானது.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தனது வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும், உயரமாகவும் இருப்பவர் எனவும் அவருக்கு குறைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கடந்த மாதம் கூறினார்.

தன்னை அந்த நபர் பலாத்காரம செய்ததாலேயே கர்ப்பமானதாகவும் கூறினார்.

இது குறித்து பொலிசாருக்கு முழுமையான விளக்கத்துடன் புகார் கொடுத்துவிட்டேன், அவர்கள் இது தொடர்பில் விசாரிப்பார்கள்.

தற்போது அந்த நபரை பொலிசார் எதுவும் செய்யவில்லை, எனக்கு குழந்தை பிறந்த பின்னர் அதன் டி.என்.ஏவை வைத்து அந்த நபருடன் பரிசோதனை நடக்கும், பின்னர் அவர் மீது நடவடிக்கை பாயும் என கூறினார்.

அதே சமயம் 10 வயது சிறுவன் Ivan உடன் Darya தொடர்ந்து காதலில் உள்ளதாகவும் அறிவித்தார். இப்படி Darya கர்ப்பத்துக்கு காரணம் யார் என குழப்பம் நிலவும் நிலையில் தனது பிரசவம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவரிடம் சிலர், விரைவில் பிரசவம் நடக்கவுள்ள நிலையில் அது குறித்து அச்சம் கொண்டுள்ளீர்களா என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த Darya, ஆம்! குழந்தை பெற்றெடுப்பதை நினைத்தால் பயமாக உள்ளது, இயற்கையான பிரசவத்தின் வலியைப் பற்றி பயப்படுகிறேன், எனவே சிசேரியனுக்கே அதிக வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

கர்ப்ப காலத்தில் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். பல கர்ப்பிணிப் பெண்கள் இதே போல பாதிக்கப்படுவதாக அறிவேன் என கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் Daryaக்கு பிரசவம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதனிடையில் Darya வயிற்றில் Ivan முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலான நிலையில் Darya -வை நான் பத்திரமாக கவனித்து கொள்வேன் என சிறுவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here