பில்கேட்ஸ், எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த மோசடி கும்பல்!!

858

ஓன்லைன் ஹேக்கிங் மோசடி கும்பல் ஒன்றால் உலகின் சில பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

எலோன் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய மூவரும் இதேபோன்ற பாதுகாப்பு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் அந்த மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது.

அவர்களுடைய பக்கத்தில், நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு மடங்கு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டொலர் அனுப்பினால், 2 ஆயிரம் டொலர் திரும்ப வழங்குவோம்.


30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர்.

இதில் பொதுமக்களில் பலர் ஏமாந்து அந்த மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பியுள்ளதாகவும், இதுவரை சுமார் 82,800 பவுண்டுகள் அளவுக்கு பிட்காய்ன்களை அந்த கும்பல் சேகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, பிரபலங்கள் பலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால், டுவிட்டர் தளம் முடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.