பிள்ளைகளின் மிதி வண்டிக்கு உணவு கிடைக்குமா? ஒரு சுவிஸ் தாயாரின் நெஞ்சை உலுக்கும் விளம்பரம்!

841

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று உணவுக்காக வெளியிட்டுள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனியார் இணைய பக்கத்தில் அந்த குடும்பமானது ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பிள்ளைகளின் மிதி வண்டி அல்லது மேஜை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு உணவு தர முடியுமா என வினவியுள்ளது.

அந்த விளம்பரம் பலரது கவனத்தை ஈர்க்கவே, அந்த குடும்பத்திற்கு பலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

பிரேசில் நாட்டவர்களான இந்த குடும்பம் இதற்கு முன்னர் தொலைக்காட்சி, மேஜை உள்ளிட்ட பொருட்களை வைத்தும் விளம்பரம் செய்து உணவு தேடிக் கொண்டுள்ளனர்.


தூய்மைப் பணியாளராக பணியாற்றும் அந்த தாயார், தற்போதைய கொரோனா நாட்களில் போதிய வேலை இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கைவசம் உணவுக்காக கொஞ்ச பணமே இருப்பதால், கவலைக்கு உள்ளானதாக கூறும் அந்த தம்பதி,

சுவிஸ் மக்களின் தாராள குணத்தை பாராட்டி நன்றி கூறியுள்ளனர். இதுவரை அந்த விளம்பரத்தை பார்த்து மூவர் உதவ முன்வந்துள்ளதாகவும், ஆனால் எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அந்த பிரேசில் தம்பதி.

மண்டல நிர்வாகம் வழங்கும் உதவிகளை ஏன் பெறவில்லை என்ற கேள்விக்கு, எங்கள் மகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டும்,

மண்டல நிர்வாகம் அளிக்கும் சமூக நலன்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என அந்த தம்பதி தெரிவித்துள்ளது.