மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினால் இந்த அணிக்காகவே விளையாட ஆசைப்படுகிறேன் – ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!!

1168

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் அந்த இடைவெளியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும் ஸ்ரீசாந்தின் தடை காலத்திற்குப் பின்பு அவர் ஐபிஎல்லில் விளையாடும் நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் ஐபிஎல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ஐபிஎல் அணி எந்த அணி என்னை ஏலத்தில் எடுத்தாலும் அதில் நான் விளையாட தயாராக இருக்கிறேன்.

2021 ஆம் ஆண்டுக்கான ஏலத்திலும் நான் இடம் பெறுவேன். ஆனாலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் நான் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வெளிநாட்டு வீரர்கள் ஆடவில்லை என்றால் அதிகளவு இந்திய வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அப்படி எனக்கு வாய்ப்பு கிடைக்குமாயின் மும்பை அணிக்காக விளையாட விரும்புவதாக ஸ்ரீசாந்த் கூறினார்.

மேலும் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றால் அதற்கு உங்களது அணி என்று என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீசாந்த் : அவரது t20 பெஸ்ட் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


அடுத்த இரண்டு இடங்களுக்கு விராட் கோலி மற்றும் ரெய்னாவை தேர்வு செய்து உள்ள ஸ்ரீசாந்த் ஐந்தாவதாக ராகுலையும், விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார்.ஆல்-ரவுண்டராக பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் தெரிவு செய்த ஸ்ரீசாந்த் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் தேர்வு செய்துள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக யாரும் எதிர்பார்க்காத விதமாக பும்ராவுடன், தன்னையும் தேர்வு செய்து அவர் அணியை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசாந்தின் இந்திய லெவன் அணி இதோ : ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கே.எல். ராகுல், தோனி, பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, ஸ்ரீசாந்த்.