இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உருவ அமைப்பிலும் உடற்கட்டிலும் மிகவும் கவனம் செலுத்துபவர். எப்போதும் தனது உடைகளை மிகச்சரியாக அணிபவர். அதேபோல் மிகப்பெரிய டாட்டூ பிரியர். அவரது உடல் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து பாகங்களிலும் டாட்டூ குத்தி வைத்துள்ளார்.
அவரது உடம்பில் மட்டும் மொத்தம் 11 டாட்டூ இருக்கிறது. அவரது முழங்கை அவரது கை என இருக்கும் இடங்களிலெல்லாம் பச்சை குத்தி வைத்துள்ளார். தற்போது 31 வயதாகும் இவர், இவரைப் பார்த்து பலரும் இந்த பாணியை கடைபிடித்து வருகின்றனர். விராட் கோலிக்கு பின்னர் தான் இந்தியாவில் ‘டக் டெய்ல்’ எனப்படும் தாடி விடும் பழக்கம் அதிகம் ஆனது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி தனது உடலில் இருக்கும் 11 டாட்டூ குறித்து கூறியிருந்தார். இதில் முதல் டாட்டூ பழங்குடியினர் கலை குறித்த ஒரு டாட்டூ. அடுத்து இரண்டாவதாக தனது தாய் சரோஜ் மற்றும் தந்தை
பிரேம் ஆகியோரின் பெயர்களை குறித்துள்ளார்.
அதேபோல் இந்திய அணிக்காக தான் எத்தனையாவது வீரராக முதன்முதலில் களமிறங்கினார் என்ற எண் குறித்தும் பச்சை குத்தி வைத்துள்ளார். ஒருநாள் போட்டிக்காக 175வது வீரராகவும், டெஸ்ட் போட்டிகள் ஒருநாள் போட்டிகளில் 269 ஆவது வீரராக களமிறங்கினார் அந்த எண்களையும் பொறித்து வைத்துள்ளார்.
அதன்பின்னர் விருச்சக ராசிகாரறான விராட் கோலி விருச்சக ராசியின் சின்னம் தேள் சின்னத்தை தனது வலது தோள்பட்டையில் வரைந்து வைத்துள்ளார். அதனை தொடர்ந்து ஜப்பானின் சாமுராய் வீரனின் படமும் அவரது தோள்பட்டையை அலங்கரித்துள்ளது. அவரது இடது தோள் பட்டையில் உள்ள சாமுராய்தான் தனக்கான உத்வேகத்தை அளிப்பதாக பலமுறை கூறியதை கேள்விப்பட்டிருப்போம்.
அதனை தாண்டி கடவுளின் கண் போன்ற ஒரு டாட்டூ இருக்கிறது. நாம் செய்வதை எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை தான் இது குறிக்கும். கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஓம் எனும் சின்னத்தை போறித்தார். ஓம் ஒரு சர்வ தேசத்திற்கான ஒலி அண்டத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஓம் என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் அதன் காரணமாகத்தான் இதனையும் எனது உடம்பில் பொரித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி.
விராட் கோலியின் உடம்பில் உள்ள டேட்டூ மற்றும் அதன் அர்த்தங்களும் அடங்கிய இந்த பதிவு தற்போது கோலியின் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. மேலும் கோலிக்கு பிறகு தற்போது ராகுல், பாண்டியா, மனிஷ் பாண்டே, சாஹல், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் டேட்டூ பிரியர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.