வீடியோவை வெளியிட்டு எதன் மீது தனக்கு காதல் என்பதை வெளிப்படுத்திய கோலி..!

1232

இந்திய கிரிக்கெட் அணியில் பிட்னஸில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவது கேப்டன் விராட் கோலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. பலமுறை பேட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டங்களுக்கு காரணமே, எனது உடல் பிட்னஸ் என்றும், வீரர்களுக்கு இது மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களில் வீரர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு, ஆன்லைன் சாட்டில் ஈடுபட்டிக் கொண்டிருந்த வேளையில்,

விராட் கோலி தனது பிட்னஸில்தான் அதிக கவனம் செலுத்தினார். அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்த நிலையில், அதிக எடையுடன் பளுதூக்கும் வீடியோவை விராட் கோலி வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வீடியோவுடன், “தினமும் உடற்பயிற்சி செய்வதில்,

தனக்கு பிடித்தமான பளுதூக்குதலை தேர்வு செய்து, அதனை செய்வேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.