பிரான்சின் மிக பிரபலமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான L’Oréal, தனது விளம்பரங்களில் இருந்து ‘வெள்ளை’ எனும் வார்த்தையை அகற்றியுள்ளது.
உலகம் முழுவதும் தங்களது விளம்பரங்களில் இருந்து இந்த வார்த்தையை அகற்றுவதாக அறிவித்துள்ளது.
சனிக்கிழமை ஜூன் 27 ஆம் திகதி, இன்று தங்களது ஊடக அறிக்கையில் இதனை அறிவித்துள்ளது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
மேலதிக விபரங்கள் அதில் அறிவிக்கவில்லை என்றபோதும், சர்வதேசம் முழுவதும் நிலவும் நிறவெறிக்கு எதிராக இந்த முடிவை தாம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது எந்த ஒரு உற்பத்தி பொருட்களிலும் ‘வெள்ளை’/ ‘வெள்ளையாக்குதல்’/ தெளிவானது’ போன்ற எந்த ஒரு வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டோம் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.