இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் தள்ளிவைப்பு!!

820

வருகிற செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடரும் அத்துடன் அத்துடன் அடுத்த மாதம் நியூசிலாந்து ‘ஏ’ அணியின் இந்திய வருகையும் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் நாளை நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் வருங்கால போட்டி அட்டவணை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் இங்கிலாந்து அணியின் வருகை தள்ளிவைப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


அந்த நேரத்தில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தற்போதைய தொடரையும் சேர்த்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.