இங்கிலாந்து மண்ணில் தெறிக்கவிடும் மேற்கிந்திய தீவு! ஸ்டம்ப்பை பறக்கவிட்ட அசத்தல் வீடியோ!!

886

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் ஸ்டம்பை தெறிக்க விட்ட வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, கிரிக்கெட் தொடர் நடைபெறமால இருந்தது. இதையடுத்து இந்த கொரோனாவிற்கு மத்தியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று பார்வையாளர்கள் இல்லாமல் துவங்கியது. ஆரம்பத்திலே ஆட்டம் கண்ட இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 204 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இந்நிலையில் இப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேப்ரியல், இங்கிலாந்து வீரரான ஜோ டென்லியை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார்.

கேப்ரியலின் பந்து வீச்சில் ஆப் ஸ்டம்ப் பிடுங்கி எறியப்பட்டது. ஜோ டென்லி 18 ஓட்டங்களில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 204 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகினர்.