இலங்கை மட்டுமல்ல ஜிம்பாப்வே தொடருக்கும் ஆப்பு..! பிசிசிஐ அதிரடி..

1032

இலங்கை தொடரை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகளவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இந்திய அணியும் இதுவரை எந்தத் தொடரிலும் விளையாடவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் இலங்கை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவும் இந்தத் தொடருக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இலங்கை தொடர் நேற்று ரத்து செய்யப்பட்டது.


இதனிடையே, ஜிம்பாப்வே அணி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தது. தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.