பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..!

1169

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களில் கருவளையம் ஏற்படுவது. கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் முகத்தின் அழகை முழுவதும் கெடுத்துவிடும். இருப்பினும் இந்த கருவளையம் பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மிக எளிமையான முறையில் சரி செய்துவிட முடியும்.

கருவளையம் மறைய உருளைக்கிழங்கு ஒரு சிறந்த அழகு சாதன பொருள் என்று சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு சாறு – 1 கப்

வெள்ளரிக்காய் சாறு – 1 கப்

கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

செய்முறை:-

சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் உருளைக்கிழங்கு சாறு, ஒரு கப் வெள்ளரிக்காய் சாறு மற்றும் கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் அவற்றில் காட்டன் பேட் (cotton pads) அல்லது காட்டன் பஞ்சினை ஊறவைத்து, பின் ப்ரிஜியில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

பின் இரவு உறங்குவதற்கு முன் உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறில் ஊறவைத்த காட்டன் பேடை எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் கண்களில் அப்ளை செய்த காட்டன் பேடை அகற்ற வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து ஒருவாரம் வரை செய்து வர ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.