மாங்குயிலே.. பூங்குயிலே.. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண் : வைரல் வீடியோ!!

748

வைரல்  வீடியோ….

காலையில் எழுந்து குட்மார்னிங் பல்தேய்ப்பது முதல் இரவு பீசா சாப்பிடுவது வரை எல்லாமே செல்பி மயம். இன்றைய இளசுகளுக்கு ஆறாம் விரலாய் கைகளில் வசமாகியிருக்கும் மொபைல் இன்றி வாழ்க்கையே இல்லை. எந்நேரமும் செல்பி , போஸ்ட், லைக்ஸ், ஷேர்ஸ் என ஓடிக் கொண்டிருக்கிறது. சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார்கள்.

செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டிங். அந்த வகையில் ஒரு பெண் தலையில் சிலிண்டரை கரகம் போல் வைத்து ஆடியுள்ளார். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகமே சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் என ட்ரெண்டாகி வரும். சமீபத்தில் துர்கா என்ற பெண்மனி தலையில் சிலிண்டர் வைத்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதேபாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்து, கருத்துக்களை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளனர்.

பலரும் இந்த வீடியோக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஏன் இதுபோன்று பாதுகாப்பற்ற சாகசங்களை வீட்டில் செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by கரகம் துர்கா (@karagam_durga)