மார்டன் உடையில் ஏடாகூடமான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

77

ஐஸ்வர்யா லட்சுமி..

மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவில் நடிக்க வந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். கேரளாவை சேர்ந்த ஐஸ்வரா மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படியே சினிமா ஆர்வமும் வந்துவிட்டது.

சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சுந்தர்சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். அதன்பின் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் நடித்திருந்தார். அப்படியே கார்க்கி, கட்டா குஸ்தி ஆகிய படங்களிலும் நடித்தார்.

இதில், கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படமும் ஹிட் அடிக்கவே இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. மலையாளத்தில் சில படங்களில் சிறப்பாக நடித்து நிறைய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


ஒருபக்கம் தமிழ், ஒருபக்கம் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், புதுப்புது உடைகளில் கட்டழகை காட்டி அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அந்த வகையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜிவ்வென சுண்டி இழுத்துள்ளது.