விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்!!

1129

விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே அல்லது தற்போதைய விளையாட்டு அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மகிந்தானந்த அழுத்கமகேவின் இந்த கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.


விளையாட்டு துறையில் ஏற்படும் பிழைகள் தொடர்பில் ஆராயும் சிறப்பு பணிக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.