19 வயசு தான்… திடீரென பலியான இன்ஸ்டா பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

130

பிரேசில்…

இன்ஸ்டா உட்பட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழ்ந்தவர் மரியா சோபியா வலிம். பிரேசில் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 19 தான். இவர் தன்னுடையா இன்ஸ்டா பதிவில் தன்னுடைய தினசரி உடற்பயிற்சி தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து வந்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் தேடப்படும் அளவுக்கு பிரபலமானார்.

மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் ஃபாலோயர்களிடம் பேசுவார். இன்ஸ்டாவில் அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.


ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார். சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும்அவரது தந்தை உறுதி செய்துள்ளார். வெறும் 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரது ஃபாலோயர்கள் பெரும் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்