2011 உலக கிண்ண சர்ச்சை – சங்ககாரவிற்கு சிறப்பு விசாரணை பிரிவு அழைப்பு!!

775

2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, கிரிக்கெட் உப்புல் தரங்க ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் முன் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே குமார் சங்கக்கார நாளை விசாரணைக்குழுவின் முன் முன்னிலையாகவுள்ளார்.


2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அப்போது விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மகிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளையாட்டு துறை அமைச்சினால் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.