60 வயதில் பிரபல நடிகர் 2வது திருமணம்… முதல் மனைவி உருக்கமான பதிவு!!

55489

ஆஷிஷ் வித்யார்த்தி…

வில்லன் நடிகராகவே தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த பின்னர், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பல தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது 60வது வயதியில் 2 வது திருமணம் செய்து கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பினாலும் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

1991ல் ஹிந்தியில் அறிமுகமாகி தமிழில் ‘தில்’ படத்தின் மூலம் பிரபலமான ஆஷிஷ் வித்யார்த்தி, முதல் படத்திலேயே விக்ரமுக்கு முரட்டு வில்லனாக நடித்து மிரட்டினார். அடுத்தடுத்த வாய்ப்புக்கள் தமிழில் குவிந்தன. குறிப்பாக பாபா படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், ஏழுமலை படத்தில் அர்ஜுனுக்கு வில்லனாகவும், பகவதி படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு பலரால் கொண்டாடப்பட்டது.

ஒரு சில படங்களில் தந்தை, சித்தப்பா போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அதே போல் இவர், தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் . ஆஷிஷ் வித்யார்த்தி சமீபகாலமாக தமிழ் படங்களில் அதிகம் நடிப்பது இல்லை.


அதே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் பெங்காலி போன்ற மொழிகளில் அதிகம் நடித்தவர். சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி அவ்வப்போது, தன்னுடைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவியின் மூலம் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி,

ரூபாலி பருவ என்கிற பெண்ணை தன்னுடைய 60வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ ஜோடி மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களுடைய திருமணம் நேற்று கல்கத்தாவில் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி கௌஹாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் 11 மொழிகளில் நடித்துள்ள ஆஷிஷின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரூபாலிவும் நானும் சந்தித்துக் கொண்டது நீண்ட கதை. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். எனது வாழ்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்திருப்பது சிறந்த உணர்வைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து, மாலையில் எங்கள் குடும்பத்தினருடன் விருந்து நிகழ்வு நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்”வாழ்க்கையில் சரியான நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்று அவர்கள் உங்களிடம் கேட்க மாட்டார்கள்.

உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் செய்யாதீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார். அத்துடன் “அதிகமான சிந்தனையும் சந்தேகமும் மனதை விட்டு அகலட்டும்.

தெளிவு குழப்பத்தை மாற்ற வேண்டும். அமைதி உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும். நீங்கள் வலிமையானவர். உங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நேரம் இது. நீங்கள் அதற்கு தகுதியானவர் என பதிவிட்டுள்ளார்.