64 வயது முதியவரை கார் ஏற்றி கொன்ற பிரபல கிரிகெட் வீரர்..! இலங்கை கிரிக்கெட் எடுத்த முடிவு!!

828

தேசிய கிரிக்கெட் அணி வீரர் குசால் மெண்டிஸ் கார் ஏற்றி முதியவர் ஒருவரை கொன்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தற்போது இலங்கை கிரிக்கெட் அதிரடி முடிவெடுத்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி அதிகாலை பனாதுராவில் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார், 64 வயது முதியவர் மீது மோதியது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் மரணம் அடைந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து குசால் மெண்டிஸ்-ஐ கைது செய்தனர்.


பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குசால் மெண்டிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பனதுராவில் தேசிய வீரர் குசால் மெண்டிஸ் ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து ஒழுங்கு விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் முடிவு செய்துள்ளது.