8 முறை லொட்டரியில் உச்ச பரிசை வென்றுள்ள அதிர்ஷ்டசாலி! அவர் எப்படி வெற்றி எண்களை தேர்வு செய்வார் தெரியுமா?

820

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை அதிகளவில் பழக்கமாக இவர் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இந்த பரிசை அவர் ஏழு முறை வென்றுள்ளார்.

இதன் மூலம் மொத்தமாக 8 முறை $800,000 பரிசை கேரி தட்டி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

தொழில் செய்து வரும் கேரி பொதுவாக தனது குடும்பத்தினரின் பிறந்தநாள் மற்றும் திகதியை வைத்தே லொட்டரி எண்களை தேர்வு செய்வார்.

அது அவருக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையே கொண்டு வந்துள்ளது என தெரியவந்துள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...