T-20 உலகக்கிண்ண போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!

784

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்ரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே கூறுகையில், ‘ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாட 15 நாட்டு வீரர்களை அவுஸ்ரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் இரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம்.


போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இரசிகர்கள் இல்லாமல் உலகக்கிண்ண தொடர் இல்லை. கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடர், ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலகக்கிண்ண தொடர் நடைபெறுமா? என்பது சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்யவுள்ளது.