கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!

990

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான குசல் மெண்டிஸ் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே குசல் மெண்டிஸ் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மொண்டிஸ் பயணித்த வாகனம் விபத்திற்கு இலக்காகியிருந்தது.


இந்த சம்பவத்தில் 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த நிலையில் குசல் மெண்டிஸ் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்தே இன்றைய தினம் அவர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.