மனைவியை கடத்திச் சென்ற வழக்கில் திடீர் திருப்பம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!!

345

தென்காசி…

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இது பற்றி வினித் தரப்பில் புகார் ஒன்றும் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்படி இருக்கையில், கிருத்திகாவின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், தான் பாதுகாப்பாகவும், நன்றாகவும் இருப்பதாகவும் கிருத்திகா கூற, ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

என்னை பற்றி ஏதாவது பிரச்சனை அங்கே ஏற்பட்டால் அது வேண்டாம் என்றும் இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் யாருக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறும் கிருத்திகா, நடந்தது அனைத்தும் தன்னுடைய விருப்பத்துடன் தான் நடந்தது என்றும் கூறி உள்ளார்.

அதே போல, கிருத்திகாவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆனது பற்றியும் அவரது தந்தை சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், கிருத்திகா வீடியோவில் பேசியுள்ளது குறித்து வினித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஜனவரி 20 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணோம்.

அதுக்கு முன்னாடியே என் வீட்டுல இருந்து பிரச்சனைகள் வரலாம்ன்னு கிருத்திகா சொன்னாங்க. அதுனால போலீஸ் கம்பளைண்ட் எல்லாம் குடுத்திருந்தோம். அதுக்கப்புறம் அவங்கள கடத்திட்டு போய்ட்டாங்க. அவங்க கடத்திட்டு போய் ஒரு வாரம் ஆகுது.

இப்ப என் மனைவி கிருத்திகா பேசுற மாதிரி வீடியோ ஒண்ணு ரிலீஸ் பண்ணி இருக்காங்க. எனக்கு அவங்க சொன்னது எதுலையுமே நம்பிக்கை இல்ல. ஏன் 1 வாரம் கழிச்சு பண்ணனும்.

அந்த விஷயம் உண்மைன்னா, அவங்க போலீஸ்க்கோ, கோர்ட்க்கோ நேரா போயிருக்கலாம். இங்க தனிப்படை போலீஸ் வந்து தேடிட்டு இருக்காங்க. இன்னும் அவங்க சிக்கல. இதுல இருந்து தப்பிக்க அப்படி பண்ணி இருப்பாங்களோன்னு தோணுது” என தெரிவித்துள்ளார்.