சாத்தான் குளம் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்… திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

577

சாத்தான் குளம் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயங்கரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறித்த இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதற்காக விரிவாக காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here