ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. தந்தையின் சகோதரி கைது : அதிர்ச்சி சம்பவம்!!

649

கேரள மாநிலம்….

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரிகுளத்தைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது 12 வயது மகன் அகமது ஹசன் ரிபாயி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அகமது 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, அகமதுவுக்கு அவனது அத்தை, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்.

அத்தைக் கொடுத்த ஐஸ்க்ரீமைச் சாப்பிட்ட பின்னர், தொடர்ந்து வாந்தி எடுத்த சிறுவன், அதன் பின்னர் சோர்வாகி இருக்கிறான். மகன் மிகவும் சோர்ந்து காணப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பதறியடித்தப்படி சிறுவனைக் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல், அடுத்த நாள் அகமது உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் திடீர் சோர்வுக்கும், வாந்திக்கும் காரணம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது தான் என்று உறவினர்களும், பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கையில், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட ஐஸ்க்ரீம் கடையில் ஆய்வு செய்தனர்.


அப்போது, அந்த கடையில் சேகரித்த ஐஸ்கிரீம் மாதிரிகளில் ஆரோக்கியமற்ற எதுவும் இல்லை என்றாலும், ஐஸ்க்ரீம் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிறுவன் அகமதுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியானது. பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் உடலில் அம்மோனியம் பாஸ்பைட் என்கிற விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

போலீசாரின் சந்தேகப் பார்வை, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்த சிறுவனின் அத்தை மீது திரும்பியது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில், அகமதுவின் அத்தை தாஹிரா (34) குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எதற்காக அகமதுவைக் கொலைச் செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை. இரு குடும்பங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணங்கள் தாஹிரா சொன்ன பிறகே வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.