தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்!!

30

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அதனை பார்த்த சாய் சரண் (17) என்ற சிறுவன் கட்டடத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக கயிற்றை கொடுத்து உள்ளே இருந்த 50 தொழிலாளர்கள் வெளியில் வர உதவியுள்ளார்.

தகுந்த நேரத்தில் சிறுவன் துரிதமாகச் செயல்பட்டதால் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பினர். இதன்பிறகு, தீயணைப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களை காப்பாற்றிய சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி டி.பூர்ணச்சந்தர், “மாலை 5 மணியளவில் எங்களுக்கு தீ விபத்து குறித்த தகவல் வந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.


மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் உள்ள குடோனில் இருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.