முதலையுடன் திருமணம்.. முத்தம் கொடுத்து சடங்கை முடித்து வைத்த மேயர்!!

174

மெக்சிகோவில்..

இந்த திருமணத்தில் ஒரு மேயர் தான் மணமகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணமகள் யார் என்பதுதான். மேயர் ஒரு முதலையை மணமகளாக ஏற்றுக்கொண்டார்.

தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா (Victor Hugo Sosa), நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் ஒரு பெண் முதலையை திருமணம் செய்துகொண்டார்.

அவர் அலிசியா அட்ரியானா என்ற பெண் முதலையை இந்த பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டார். Caiman இனத்தைச் சார்ந்த இந்த முதலை, உள்ளூர் கதைகளில் “இளவரசி பெண்” குறிப்பிடப்பட்டுள்ளது. சோண்டல் மற்றும் ஹுவே பழங்குடியினக் குழுக்களுக்கு இடையேயான அமைதியை நினைவுகூரும் வகையில் இந்த திருமண சடங்கு 230 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.


மேயர், சோண்டல் பழங்குடியினரின் மன்னராக உருவெடுத்து, முதலையை மணந்து, இரு கலாச்சாரங்களின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துகிறார். சடங்கின் ஒரு பகுதியாக, பாரம்பரிய வெள்ளை நிற திருமண ஆடையில் மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட முதலை திருமண இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மணமக்கள் கிராம வீதி வழியாக இசைக்கருவிகள் மற்றும் இசைக்கருவிகள் மேளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர். தெருவில் நடந்து செல்லும் போது மேயர் மணமகளை கையில் எடுத்தார். மேயர் மணமகளை முத்தமிட்டவுடன் திருமண விழா முடிந்தது. முதலைக்கு முத்தம் கொடுக்கும்போது கடிக்காமல் இருக்க அதன் வாயை கட்டிவைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான திருமணத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வித்தியாசமான திருமணம் ஒக்ஸாவில் நடந்தது. முதலி சோண்டல் சமூகத்தால் பூமியின் பிரதிநிதியாக மதிக்கப்படுகிறது.