லட்சக்கணக்கில் சம்பளம்… வேலையை உதறி விட்டு.. காதலிக்காக கொள்ளையனாக மாறிய தமிழக என்ஜினியர்!!

2391

திருவள்ளூர்……

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் ரகு படிப்பில் கெட்டிக்காரர். சென்னை ஐஐடியில் படித்து முடித்து விட்டு, துபாயில் இன்ஜினியராக பணியாற்றினார். அண்மையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் அதன் பின்னர் துபாய்க்கு திரும்பி செல்லவில்லை. இதனையடுத்து பீகாருக்கு வேலைக்குச் சென்றிருந்தார். அங்கு நடன அழகியோடு ரகுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

அந்த நடன அழகி காதலியுடன் ஊர் சுற்றிய ரகு, தான் சம்பாதித்த பணத்தை தண்ணீராக செலவு செய்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் காலியானது. எனினும் அவர் துபாயில் இருந்த நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்ததால் அங்கிருந்து பணம் வந்தது. இதனையும் செலவு செய்தார்.

அதே நேரம் நடன அழகியின் அழகில் மயங்கி கிடந்த ஹேமந்த் குமாரால் சரியாக வேலைச் செய்ய முடியவில்லை. பீகாரில் இருக்கும் காதலியின் நினைவு அவரை வாட்டி எடுத்தது. இதனால் கைநிறைய சம்பளத்தை வாங்கி கொடுத்த துபாய் வேலையை முழுமையாக உதறி விட்டு பீகாருக்கு திரும்பினார். இதன்பின்னர் கையில் இருந்த பணத்தை காதலிக்காக செலவழிக்க தொடங்கினார்.


இப்படி சிறுக சிறுக சேமித்த பணம் அனைத்தையும் ஹேமந்த் இழந்தார். நடன அழகியான காதலி சொகுசாக வாழ்பவர். இதனால் அவரது செலவினங்களும் எல்லை மீறியே இருந்துள்ளது.

இதனால் தன்னுடைய 15 ஆண்டுகால சேமிப்பு பணம் மொத்தத்தையும் காதலிக்காக செலவு செய்துள்ளார். ஆனாலும் அவரின் காதலி மீண்டும் மீண்டும் நிறைய கேட்க தொடங்கியதால் இன்ஜினியராக இருந்த ரகு கொள்ளையனாக அவதாரம் எடுத்துள்ளார்.

செயின் பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் தன்னுடைய 40 வயதில் காதலிக்காக சிறை கம்பிகளை தற்போது எண்ணிக் கொண்டிருக்கிறார். சென்னை ஐஐடியில் இன்ஜினியராக படிப்பை முடித்து விட்டு காதலுக்காக கொள்ளையனாக மாறிய இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.