Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மம்தா மோகன் தாஸ்.. பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும். அந்த வகையில், விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற...
கடலூர்..... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு 11 மாதத்தில் ஹரிமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் பரசுராம் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் பிரவீனா அவரது மாமனார் முருகேசன் மாமியார் விஜயாவுடன் ஒரே வீட்டில் தங்கி...
கும்பகோணம்.. கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார் ஸ்வேதா. இந்த நிலையில் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த 27 வயதான தியாகராஜன் என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்துக்கு அடிக்கடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக...
கேப்ரில்லா-ஆஜித்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்....
நெல்லை.. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப காலமாக மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், மதுபோதையில் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலனின் தாயார் மூக்கம்மாள் தனது...
கேரளா.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி அலைந்துள்ளார். ஒரு வழியாக அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் குரூப் (60) என்பவர் சசிதரனின் மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையையும் அவரிடம் இருந்து பிரபாகரன் பெற்றுள்ளார். கிளார்க் வேலை...
மகாராஷ்டிர.. மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நராப்ஜி மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட...
சென்னை.... சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல் போனதைக் கண்டு காப்பக நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி இன்ஸ்டாகிராம்...
சென்னை.... சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து கணவன் ஜெய்கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெய்கிருஷ்ணன், மனைவியைத் தொடர்ந்து கொண்டு ஏன் பிறந்த நாள்...