Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த நாகபந்தல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்...
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமதாஸ். இவரது மகள் ஆதிஷா (6). விடுமுறை நாளான நேற்று பிரேமதாஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம்...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...
கர்நாடகாவில் தனது ஆறு வயது மகனை, முதலைகள் உள்ள கால்வாயில் வீசி கொன்ற சம்பவத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், ஹலமதி கிராமத்தில் வசிப்பவர் சாவித்திரி (32). இவரது கணவர் ரவிக்குமார் (36). சாவித்திரி வீட்டு வேலைக்கு சென்று வந்தார். ரவிக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் வினோத் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தை வினோத்திற்கு...
தூத்துக்குடி:தூத்துக்குடி இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த நிலையிலும், வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை திருப்பித் தராமல் ஏமாற்றிய மனைவியை உறவினருடன் சேர்ந்து கணவரே கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள முத்தலாபுரம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்துள்ளார். பி.காம் பட்டதாரியான இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த எம்ஏ, பிஎட் பட்டதாரியான...
ராமநாதபுரம்: ராமநாதபுரம், தாயுமானவர் சுவாமி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (47). கொத்தனார். இவரது மனைவி சரண்யா(38). தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வம், சரண்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார். நேற்று அதிகாலை சரண்யா, பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வம், சரண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரண்யாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பிறகு அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை...
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார். அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் போலந்தைச் சேர்ந்த எவலினா மேத்ரா (30) உடன் ரமேஷனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கும் இதனை கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே...
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு. நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பகுதி நேரம் வேலை செய்துள்ளார். வேலைக்கு சேர்ந்து...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (54). மகன் சுப்பிரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவகுமார், அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் வசித்து வருகிறார். உடன் பிறந்த அண்ணன் தங்கையான இருவருக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். சிவகுமாரின் 17 வயது மகள்,...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் 45 வயது ஜெய்சங்கர். இவருடைய மனைவி 36 வயது சாந்தி . இவர்களுக்கு அருண்குமார் , ரவிக்குமார் என 2 மகன்கள். இந்நிலையில் சாந்தி மார்ச் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஜெயசங்கருக்கும், சாந்திக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...