Wednesday, August 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1602 POSTS 0 COMMENTS
நீட் தேர்வில் சாதிக்க முடியாத பெண்ணிற்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த தம்பதியினர் சரேஷ் மற்றும் கீதா. இவர்களுக்கு 20 வயதில் ரிதுபர்ணா என்ற பெண் ஒருவர் இருக்கிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், இவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது....
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது. இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், சிறுமி மூடியை அகற்ற முயற்சிக்கும்போது, நாக்கு மேலும் சிக்கிக்கொண்டு வலியால் கதறித் துடித்தார். சிறுமியின் அழுகையை பார்த்து வகுப்பு ஆசிரியர் உடனே உதவி செய்தார். ஆனாலும்,...
சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர். இவர்களது மகள் மணிமேகலை (29). இவர் 2வதாக கர்ப்பமடைந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிகாக தனது மகள் கிருபாஷினியுடன் (8) தாய்...
சமீப காலங்களாக மாடல் துறையைச் சேர்ந்தவர்கள், திரையுலகைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைச் செய்துக் கொண்டது மாடல் துறையினரிடையே பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல் (25), திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில்...
உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெருகி வருகிறது. மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் பிடித்தனர். UP 80 GT 8088 என்ற பதிவு எண்ணுடன் கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, ஆக்ரா-பா சாலையில் உள்ள அர்னாட்டா கிராமம் அருகே வழிமறிக்கப்பட்டது. பாலை பரிசோதனை செய்யும் வசதி இல்லாமல் கொண்டு வரப்பட்டது என்பதையும், அதன் தரத்தில் சந்தேகம்...
டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள...
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வான்கொல்லாவைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சந்திரசேகர்(46). இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சந்திரசேகர் மதுவுக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், பாலம்கொண்டாவைச் சேர்ந்த ஒருவருடன், ரமாதேவிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்தது வந்துள்ளது. இதனால் அவ்வபோது கணவன், மனைவி இடையே தகராறு...
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் அருகில் உள்ள ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப்...
சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவபூரணி(29), எம்.பி.பி.எஸ் முடித்த இவர், கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார். அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரிவில்...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கட் - தேஜஸ்வினி . இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அட்லாண்டா நகரில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, டல்லாஸ் நகருக்கு நேற்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கிரீன் கவுன்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக வந்த மினி லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் தீப்பிடித்து எரிந்ததில்,...