Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
மாமல்லபுரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த தனியார் காவலாளியை நோ எண்ட்ரி பகுதியில் காரில் நுழைந்தவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார்...
சாதாரண கவுன்சிலர் தானே? என்று யாரும் கேட்டு விட முடியாது. இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள கிடுகிடுவென கோடிகளில் எகிறியது சொத்து மதிப்பு. இத்தனைக்கும் பெரிய நகரப் பகுதிகளில் எல்லாம் கவுன்சிலர் கிடையாது. ஆனா ஆளுங்கட்சி கவுன்சிலர் என்கிற கெத்து போதும் என்று சொத்துக்களைக் குவிப்பதில் கோதாவில் இறங்கியிருக்கிறார் திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி. காஞ்சிபுரம் மாவட்டம், 2வது வார்டு திமுக கவுன்சிலரான ராஜலட்சுமி மீதும், அவரது குடும்பத்தினரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக்...
நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரையில் குடிபோதையில் இருந்த ஜோடிகள் போலீசாரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது அந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ​​லூப் ரோடு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டது. அங்கு வந்த போலீசார், காரில்...
வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தில் 105 வயதில் மாரியாயி என்கிற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு, 70 வயதில் சுப்பம்மாள், 68 வயதில் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர்...
காதலித்து வந்தவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில், காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும்...
திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு காரணமாக, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பருதலம். இவரது மனைவி ஜமீனா மேரி. இவர்களது மகள் செலஸ்டினா, அஞ்சலக எழுத்தராக கூத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். செலஸ்டினாவுக்கும் அவரது கணவர் பாண்டியனுக்கும் திருமணமாகி ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமடைந்த...
உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர். இதுக்கெல்லாமா தற்கொலைச் செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் ஷ்ரவ்யாவுக்கு வயது 19. இவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது உடன்...
பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறி 3 வயசு சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வரும் இவருக்கு அகிலேஷ்(3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களின் வீட்டுப் பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோட்டார்...
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்து தெரியாமல் இரவு நேரங்களில் மெரினா கடற்கரைக்கு செல்லும் நபர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டு வருகின்றனர். அந்த வகையில் மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல் துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுக்குமாறு அங்கிருந்த ஜோடியிடம் கூறியுள்ளனர்....
சிறுவயதில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டதால், பின்வாங்கி பேசுவதை நிறுத்திய மாணவியை உயிரோடு எரித்துக் கொலைச் செய்தவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி, பத்வேல் அருகே கோபாவரம் மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட 16 வயது பள்ளி மாணவி, கடப்பாவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல்...