Wednesday, September 16, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு காரணமாக, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பருதலம். இவரது மனைவி ஜமீனா மேரி. இவர்களது மகள் செலஸ்டினா, அஞ்சலக எழுத்தராக கூத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். செலஸ்டினாவுக்கும் அவரது கணவர் பாண்டியனுக்கும் திருமணமாகி ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமடைந்த...
உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர். இதுக்கெல்லாமா தற்கொலைச் செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் ஷ்ரவ்யாவுக்கு வயது 19. இவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது உடன்...
பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறி 3 வயசு சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வரும் இவருக்கு அகிலேஷ்(3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களின் வீட்டுப் பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோட்டார்...
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்து தெரியாமல் இரவு நேரங்களில் மெரினா கடற்கரைக்கு செல்லும் நபர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டு வருகின்றனர். அந்த வகையில் மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல் துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுக்குமாறு அங்கிருந்த ஜோடியிடம் கூறியுள்ளனர்....
சிறுவயதில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டதால், பின்வாங்கி பேசுவதை நிறுத்திய மாணவியை உயிரோடு எரித்துக் கொலைச் செய்தவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி, பத்வேல் அருகே கோபாவரம் மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட 16 வயது பள்ளி மாணவி, கடப்பாவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல்...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வெர்கிளம்பி முண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 19). ஸ்ரீவித்யா குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரியில் படிக்கும் ஸ்ரீவித்யா வாரந்தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம். பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்த கபீர் மகன் சபீர் (27). அவர் ஒரு கூலித்தொழிலாளி. கடந்த 6...
அசைவ உணவு உண்பதில் தவறு ஏதும் கிடையாது. வேட்டையாடிய சமூகத்தில் இருந்து தான் நாம் அனைவரும் வந்திருக்கிறோம். நமது உணவு முறையே இயல்பில் வேட்டையாடி உண்பதாக அமைந்திருப்பதால் அசைவ உணவு வகைகளின் மீதான ஈர்ப்பு இருப்பதும் இயல்பு தான். ஆனால், அவை ஆரோக்கியமானதாகவும், ஆயுளை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கோங்க. எல்லோர் நட்பு வட்டத்திலும் அசைவத்தை ஒரு பிடி பிடிக்கிற நண்பர், தோழின்னு ரவுண்டு கட்டி அடிக்கிற ஆள்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பூங்கா தெருவில் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனி தரப்பிலிருந்து வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரம் சமூகவலைத்தளத்தில் பரவியது. அதைப்பார்த்த பெண்கள், மாணவிகள் சம்பந்தப்பட்ட கம்பெனியை அணுகினர். அப்போது கம்பெனி தரப்பில் பேசியவர்கள், ``நீங்கள் 10,800 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி, எங்கள் கம்பெனியில் உறுப்பினராக வேண்டும். நீங்கள் செலுத்தும் பணத்துக்கு உங்களுக்கு சத்துமாவு, பற்பசை, தலைக்கு தேய்க்கும் ஆயில், தேன்,...
கோவை மாவட்டத்தில் வால்பாறையை அடுத்து அமைந்துள்ளது ஊசிமலை மட்டம் எஸ்டேட். இந்தப் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அய்னுல் அன்சாரி மற்றும் நசீரான் இவர்களின் மகள் 4 வயது அப்சார். ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. நசீரான் அவரது மகளுடன் அப்பகுதியில் சிற்றோடை பகுதியில் உள்ள கீரை பறிக்க சென்று உள்ளனர். அதே நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை...
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தவர் செலஸ்டினா. இவருக்குவயது 35. இவர் பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே பெண் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.