Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தின் கோவையில் மரணமடைந்ததாக நம்பப்படும் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது கை மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கு உடற்கூறாய்வு மேற்கொண்ட பின்னர் அளிக்கப்பட்ட சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூறாய்வுக்குப் பின்னர் கொடுக்கப்பட்ட அறிக்கையில், 5 ஆம் திகதி உடற்கூறாய்வு செய்யப்பட்டதாகவும், அப்போது...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வேற்று மொழி நபரால் உதவிகள் கிட்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின்...
தமிழகத்தில் உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற போது, அங்கு மகள் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மோகன ப்ரியா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற முதல் நாளில் இருந்தே, முருகனின் குடும்பத்தினர், மோகன ப்ரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த...
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு, பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது 43 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவில்கடந்த 2 நாட்களாக மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 43...
இந்தியாவில் செல்போனை திருடியதாக இளம்பெண்ணை பொலிசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நீஷு (22). இவர் வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொலிசார் நிஷு செல்போனை திருடியதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் கூறி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான்...
உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து உழவு...
நாமக்கல்லின் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பெருமாள்- அஞ்சலை. இவர்களது மகன் கோடீஸ்வரன்(வயது 30), ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை, இதனால் விரக்தியில் இருந்த கோடீஸ்வரனுக்கு நாமக்கலை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் சுமார் 12 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார், சொன்னபடி வேலை...
அமெரிக்காவில் 14 வயது சிறுமி என நினைத்து ஓன்லைன் மூலம் அவரிடம் மோசமாக பேசி, நேரில் சந்திக்க சென்ற இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஹாரிஸ் கவுண்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆலன் ரோசன் கூறுகையில், Eduardo De La Cruz Gomez என்ற நபர் சமூகவலைதள செயலி மூலம் பல பெண்களிடம் தவறாக பேசி வந்தார். இதையடுத்து 14 வயது சிறுமி போல...
சியான் விக்ரம்..... 1990ஆம் ஆண்டு ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த அவருக்கு, இயக்குனர் பாலா மூலம் செது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் அவரை மிக சிறந்த ஒரு நடிகனாக வெளிக்காட்டியது. அதனை தொடர்ந்து, காசி, பிதாமகன், சாமி போன்ற...
பிரான்ஸ்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் நகரின் நெரிசலான பகுதிகளில் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று பொலிசார் தெரிவித்தனர். எந்த நேரத்திலும் பிரான்ஸ் வைரஸின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்று அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர்கள் செவ்வாயன்று எச்சரித்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு வந்துள்ளது. ஜூலை நடுப்பகுதியில் இருந்து பாரிஸில் வைரஸ் பரவலாக பரவி வருவதாக...