Thursday, May 16, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
நடிகை சித்ரா.. விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம்...
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பஹாவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி. சி.ஆர் பரிசோதனைகள்...
வவுனியா மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் இன்று (21.10.2020) காலை திறந்து வைக்கப்பட்டது. ஆய்வு கூடத்தினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.மகேந்திரன் திறந்து வைத்துடன் ஆய்வு கூடத்தில் பாலும் காய்ச்சப்பட்டது. இந் நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 13 ஆயிரத்து 750 ஏக்கரில் உழுந்து செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் இம்முறை விளைச்சல் இல்லையெனில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். மாவட்ட மட்ட உழுந்து செய்கை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் உழுந்து செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான...
ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு...
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் வித்தியாரம்பம் சிறப்பாக இடம்பெற்றது. குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருந்தளவிலான மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) செய்வதற்காக வருகை தந்திருந்தனர். அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று (26.10.2020) காலை 9 மணியளவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரேன மோட்டார் சைக்கில் ஒன்று நகரசபை வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சடனாக டிப்பர் வாகனம் பிரேக் பிரயோகித்த சமயத்தில் டிப்பருக்கு...
வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியாவில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது என தெரியவருகின்றது. கொவிட்19 பரம்பலைத் தொடர்ந்து தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டிரும்கின்றது, இதைத் தொடர்ந்து வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியா தபால் நிலையத்தில் தேக்கிக் கிடப்பதாக அறிய முடிக்கின்றது. தென்பகுதிக்கான தபால்கள் அனைத்தும் வ்வுனியாவில் இருந்து அனுப்பப்படுகின்ற போதிலும் வட பகுதிக்கான தபால்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படாமல் காணப்படுகின்றது. குறிப்பாக வவுனியாவிற்க்கான தபால்கள் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் ஏனைய வடபகுதிற்கான விநியோகங்கள் தடைபட்டிருக்கிறது. வாகனவசதிகள் இருக்கின்ற பொழுதும்...
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவு நேற்று (31.10) இரவு வெளியாகிய நிலையில் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வெளியாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையினால் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது
கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது. கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பொது சுகாதார பரிசோதர்களுக்கு, அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக மத்திய வங்கியின் நிதி உதவியில் சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கும்...