வீட்டில் இருந்து வெளியில் சென்று தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி! நொடிபொழுதில் நடந்த பகீர் சம்பவம்!!

961

தமிழகத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண் காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன்.

8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி (28). இவர் கடந்த 21 ஆம் திகதி வீட்டிலிருந்து தனியாக வெளியே வந்து அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அப் பகுதியில் காட்டெருமை மறைந்திருந்தது.

ஆனால் அதை செல்வி பார்க்காத நிலையில் எதிர்பார்க்காத விதத்தில் காட்டெருமை அவரை தாக்கியுள்ளது.


இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது.

இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் மக்கள் இதன் காரணமாக பயத்துடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.