செர்ரி- கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களின் பங்களிப்புடன் ஜூவெண்டஸ் அணி அபார வெற்றி!

1107

செர்ரி-ஏ கால்பந்து தொடரின் லெச்ச அணிக்கெதிரான போட்டியில், ஜூவெண்டஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

அலையன்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியின் வீரரான போலோ டைபாலா 53ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 62ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடித்தார்.


ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான கொன்சாலோ ஹியுகாய்ன் 83ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை புகுத்தினார். இன்னொரு வீரரான மத்தீஜ்ஸ் டி லிஜ்ட் 85ஆவது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்தார்.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் ஜூவெண்டஸ் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

செர்ரி-ஏ கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் ஜூவெண்டஸ் அணி 69 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. லெச்ச அணி 25 புள்ளிகளுடன் 18ஆவது இடத்தில் உள்ளது.