தனது தோலில் செய்யப்பட்ட காலணியை தாய்க்கு வழங்கிய இளைஞர்.. ஏன் தெரியுமா?

68

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகின்றது.

ரவுனக் குர்ஜார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்படும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினார். இதன் போது அவருக்கு கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே தொடையில் உள்ள தோல் அகற்றப்பட்டது. அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட அந்த தோலை காலணிகள் செய்யும் தொழிலாளியிடம் ஒப்படைத்துள்ளார்.

அதிலிருந்து தனக்கு ஓர் காலணி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி தொழிலாளியும் காலணியை வடிவமைத்துள்ளார்.

அதை ரவுனக் குர்ஜார் என்பவர் தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய கிராமத்தில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சியின் போதே இதை தனது தாயிடம் ஒப்படைத்துள்ளார்.


இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். அதில் தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறியிருந்தார்.

அது என் நினைவில் இருந்தது. எனவே நான் இதை செய்து முடித்தேன். சொர்க்கம் என்பது பெற்றோரின் காலடியில் தான் இருக்கிறது என்பதை சமூகத்திற்கு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்த நெகிழ்ச்சியான செயல் குறித்து அவருடைய தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக பார்க்கிறேன்.

கடவுள் அவரை அனைத்து பிரச்சினையில் இருந்தும் காப்பாற்றி, சந்தோஷமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.