ஈரானில் மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு! கடும் கோபத்தில் மக்கள்!!

910

மல்யூத்த வீரருக்கு………..

ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மல்யூத்த வீரருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக எதிர்கொள்ளாத ஈரான் அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஈரானின் மல்யூத்த வீரர் நவ்வித் அக்பரிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது சகோதரர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ளது.

சட்ட விரோதமாகக் கூட்டங்களைச் சேர்ப்பது, தேசியப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களைச் செய்வது,


ஈரான் மூத்த தலைவர்களை அவமதித்தது போன்ற குற்றச் செயல்களின் பேரில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரின் மரணதண்டனைக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈரானைப் பொறுத்தவரை மரண தண்டனை வழங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.