திடீரென உயிரிழந்த நபர்: இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேருக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!

952

தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் நகை தொழிலாளி ஒருவர் இறந்து போக, அவர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத் துறையினர் கூறியதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேர் அதிர்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி. சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் போகவே வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகடிவ் என வந்துள்ளது, இந்நிலையில் உடல்நிலை சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

இதன்படி சென்னை சென்று கொண்டிருக்கும் போதே ஆற்காடு பகுதியில் ராமமூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.


உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ராமமூர்த்தியின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் என 100 பேர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது, அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.

அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர்அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர், இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.