Wednesday, August 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1602 POSTS 0 COMMENTS
குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் இந்த சோகமும் இணைந்துள்ளது. வெல்லங்குளாரில் வசிக்கும் நௌஃபல் என்பவரின் மனைவி ஃபசீலா, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37) மினிபஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதியர் உடன்குடி...
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்து விட்டு தினமும் மனைவி லட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து...
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஏப்ரலில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி...
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார். அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர் குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் , மகள் ருச்சிதா . இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ருச்சிதாவும் அதே கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் என்பவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பஞ்சாயத்து பேசி கண்டித்தனர். சில நாட்கள் அமைதியாக...
இந்தூரில் மிகப்பெரிய போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி. இவர் தேனிலவுக்காக மேகாலயா சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் “ஷில்லாங்கில் ஹனிமூன்” என்ற பெயரில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் எஸ்.பி. நிம்பவத் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. “திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட துரோகங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம், சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நம்முடைய நோக்கம்”...
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கார்த்திக். இவர் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கோட்டணம் பாளையம் பகுதியில் தங்கி தோட்டத்து வேலைகள் பார்த்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த நித்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். நித்யாவின்...
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த...
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், இந்த அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மீரட் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு மருத்துவர், மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கி கொண்டிருந்தார். அதே சமயத்தில், ரத்த...