Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜலஹள்ளி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கங்கா ராஜு (42). பெங்களூரு மாவட்ட காவல்துறையின் ஹெப்பக்கொடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது 36 வயது மனைவி, மகள் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கங்கா ராஜு தனது மனைவி பாக்யா, மகள் நவ்யா (19) மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் மகள்...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ஷமீம் கான் (32). அவரது சகோதரர் (தம்பி) நசீம் கான் (27). நேற்று முன்தினம், குடிபோதையில் இருந்த சலீம், தனது பாக்கெட்டிலிருந்து நசீம் 500 ரூபாய்பணத்தை எடுத்ததாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்து சண்டையாக மாறியது. இதையடுத்து, சலீம், தனது சகோதரன் என்று கூடப் பார்க்காமல், நசீமை கத்தியால் குத்தினார். இதில், நசீம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம்பக்கத்தினர் சம்பவம்...
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்த இளந்தென்றல்(28), மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடலரசி (24). வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.  இளந்தென்றலுக்கும் கடலரசிக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மருத்துவ தம்பதியினரான இருவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடலரசி ஜனவரி 7...
திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து. இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு கம்பி தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி துடிதுடித்து பலியானார். மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அவர் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து...
நாக்கை பிளவு படுத்தியும், கண்களில் டாட்டூ குத்தியும் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர், சிறையில் இருந்து விடுதலையாகி புதிய வீடியோ வெளியிட்டு இருக்கிறார். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். நார்மலாக தெரிந்தால் நாலு பேர் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதால், வித்தியாசமாகத் தெரிய வில்லங்கமான வேலைகளில் இறங்கியவர் தான் இந்த ஹரிஹரன். இதில் உச்சகட்டமாக பாம்புக்கு இருப்பது போல் நாக்கை பிளந்து இரட்டை நாக்காக ஆபரேஷன் செய்து கொண்டார். அதுமட்டும்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரியில் (ஐஐஎம்) குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் (28) எனும் மாணவர் 2ம் ஆண்டு எம்பிஏ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள் என்பதால் கல்லூரி...
சமீப காலங்களாக இளைய தலைமுறையினர் அதிகம் மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் போது மரணம், நடனமாடிக் கொண்டிருக்கும் போது மரணம் என்று அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில் 8 வயது குழந்தை ஒன்று பள்ளி வகுப்பறையில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே...
கேரள மாநிலத்தில் கோண்டான் குளங்கரா பகுதியில் வசித்து வந்தவர் வாணி ரோமசேகரன். இவர் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2023ல் செப்டம்பர் மாதம் வாணி கல்லூரி அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார். அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர...
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மலப்புரத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததாகத் தெரிகிறது. மதம் பிடித்த யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் படுகாயம் அடைந்தனர். யானை தும்பிக்கையால் பக்தர் ஒருவரை தூக்கி வீசியதில், ஒருவர் கவலைக்கிடமான...